Wednesday, January 28, 2004

இல்லாத ஒண்ணை எங்க போய்த் தேடுவேன் .. ?


Tuesday, January 27, 2004

நேற்றுப் பயம் சாப்பிட்டேன் .....!


பள்ளியில் ஆசிரியர் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார் ..
ஒரு பையனை அழைத்து ஒரு தமிழ்ப் புத்தகம் கொடுத்து வாசிக்கச் சொன்னார் ..

பையனுக்ககோ ழ , ள , ல தகறாறு. பழம் சாப்பிட்டேன் என்பதை பயம் சாப்பிட்டேன் என்று வாசித்தான் ... கழுகு என்பதை கயிகு என்றான் .. ஆசிரியர் பலமுறை முயற்சி செய்தார் அவனைச் சரியாக உச்சரிக்கவைக்க அவரால் முடியவேயில்லை ..

கோபத்துடன் பையனுக்கு இரண்டு அடி கொடுத்து அவன் அப்பாவைக் கூட்டிவரச் சொன்னார் ... அவன் அப்பா வந்தவுடன் பிரச்சனையைச் சொல்லி நீங்கள்தான் இனிமேல் அவனுக்கு வீட்டில் உச்சரிக்கப் பழகித் தரவேண்டும் என்றார் ..

கேடுவிட்டு ஆசிரியரிடம் சாதாரணமாகச் சொன்னார் அப்பா, " .சார் ... இதுதான் பிரச்சனையா ..? பையன் மேல தப்பு இல்ல... எங்க பயக்க வயக்கமே இப்படித்தான் ... "


Sunday, January 25, 2004

அப்பா .. ! வீட்டுப்பாடத்தை நானே செய்றேன்...

Saturday, January 24, 2004

ஒரு கூண்டு ..... இரு வாசல்கள் ....


அறிஞர் ஐசக் நியூட்டன் கடைசிவரை திருமணமே செய்யவில்லை .. தனியாகவே வாழ்ந்து வந்தார் .. பூனைகள் என்றால் அவருக்குக் கொள்ளைப் பிரியம் ... ஒரு முறை அவர் இரு பூனைகளை வளர்த்து வந்தார்..அந்தப் பூனைகளுக்கு ஒரு கூண்டு செய்ய எண்ணி கூண்டு செய்பவரைக் கூப்பிட்டு ஒரு கூண்டு செய்யும்படியும் , மறக்காமல் அந்தக் கூண்டில் சிறியதாக ஒரு வாசலும், பெரியதாய் ஒரு வாசலும் வைக்கவும் என்று சொன்னார்.. கூண்டு செய்பவர் ஒன்றும் புரியாமல் ஏன் இரு வாசல்கள் என்று கேட்டார் .

நியூட்டன் சொன்னார் ... "ஒரு வாசல் பெரிய பூனைக்காக மற்றொன்று சிறிய பூனைக்காக "

கூண்டு செய்பவர் சிரித்துக் கொண்டே சொன்னாராம் .. பெரிய வாசல் வழியாகவே சிறிய பூனையும் வந்து செல்லமுடியுமே ...!

Thursday, January 22, 2004

கவலைப்படாதே ...புதிதாக ஒன்று தருகிறேன்...


விஞ்ஞானி மேடம் கியூரியின் மகன் ஒரு நாள் ஒரு குண்டீசியையை வைத்து விளையாடிக்கொந்திருந்தபோது அதை விழுங்கிவிட்டான் .. பதட்டத்துடன் ஓடிவந்து சொன்னான் ...

" அம்மா... நான் கையில் வைத்திருந்த குண்டூசியைத் தெரியாமல் விழுங்கிவிட்டேன்... "

நுண்ணோக்கியை வைத்து மும்முரமாக எதையோ ஆராய்ந்துகொண்டிருந்த மேடம் கியூரி மிகச் சாதாரணமாய்ச் சொன்னார்...

" குண்டூசிதானே போனால் போகட்டும் விடு.. உனக்குப் புதிதாக ஒன்று தருகிறேன்... அதை வைத்து விளையாடு.."

Monday, January 19, 2004

டிக்கெட் இல்லாவிட்டால் பரவாயில்லை ....!


ஒரு முறை ஐன்ஸ்டீன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது பயணச்சீட்டை சரிபார்ப்பவர் ஐன்ஸ்டீனிடம் பயணச்சீட்டைக் கேட்டார் ...

ஐன்ஸ்டீனனுக்குத் தேடிப்பார்த்தபோதுதான் தெரிந்தது.. அவர் பயணச்சீட்டை எங்கேயோ தொலைத்துவிட்டார் என்பது. குழப்பத்துடன் திரு திரு வென்று விழித்தார்.. ஆனால் பரிசோதகர் ஐன்ஸ்டீனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்.

" அய்யா .. நீங்கள்தானே புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் .. நீங்கள் நிச்சயமாய் டிக்கெட் எடுத்திருப்பீர்கள் ...அதனால் உங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் பரவாயில்லை .."

ஐன்ஸ்டீன் கவலையுடன் சொன்னார்.. " எனக்குப் பிரச்சனை இப்போது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதில் இல்லை... டிக்கெட்டை எங்கோ தொலைத்துவிட்டேனே.. நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்று எப்படித் தெரிந்து கொள்வது ? "

Friday, January 16, 2004

சிறுமியின் பதில் ....


சமீபத்தில் கேட்ட ஒரு நகைச்சுவை இது...

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் டீச்சர் குழந்தைகளை முதல் நாள் விசாரித்துக்கொண்டிருந்தார் ... யார் யார் எந்த நாட்டுக்காரர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தார் ..

கடைசியாக ஒரு சிறுமியிடம் கேட்டார் .. " நீ யார்.. ? "

அந்தச் சிறுமி சொன்னாள் .."... நான் ஒரு இந்தியன் ... "

டீச்சர் சந்தேகமாகக் கேட்டார் .." நீ ஒரு அமெரிக்கன் என்றல்லவா நான் யூகித்தேன் "

சிறுமி சொன்னாள்.. ." இல்லைங்க .. டீச்சர்.... என் அம்மா ஒரு இந்தியர் , என் அப்பா ஒரு இந்தியர் .. எனவே நானும் இந்தியர் "

டீச்சர் கொஞ்சம் கிண்டலாக..
" உன் அம்மா முட்டாள் , அப்பாவும் முட்டாள் என்றால் நீ யார் ... ?"

சிறுமி சிரித்துக்கொண்டே சொன்னாள்... " ... ம் ... அப்படியானால் நான் ஒரு அமெரிக்கனாக இருப்பேன் ..."

Thursday, January 15, 2004

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ... !


Wednesday, January 14, 2004

கம்ப்யூட்டர் நினைத்துக்கொள்கிறது .. !


கம்ப்யூட்டர் மனிதனைப் பற்றி என்ன நினைத்துக்கொள்கிறது என்று நண்பர் ஒருவர் கிண்டலுக்காக இதை அனுப்பியிருந்தார் .. ! நீங்களும் கொஞ்சம் பாருங்கள்....

Click to enlarge

Monday, January 12, 2004

பிடித்த பொன்மொழிகள் ....


* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.

* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.

* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

Wednesday, January 07, 2004

நண்பர் காசியின் வலைப்பூவும் , பைபிள் தளமும் ...


நண்பர் காசி இன்று என்னுடைய வலைப்பூவில் இன்று எழுதியிருந்த கமெண்டின் வழியாக அவர் வலைப்பூவுக்கு செல்ல முயன்றேன் .... என்ன ஆச்சரியம் அது வேறு ஏதோ பக்கத்துக்கு அது இட்டுச்சென்று விட்டது ... அந்தப் பக்கம் பைபிள் சொல்லித் தருவதைப் பற்றி இருந்தது .. எனக்கோ ஆச்சரியம் .. நேற்று வரை வேறு மாதிரி இருந்த வலைப்பூ ஒரே நாளில் எப்படி இப்படி ஆகிவிட்டதே ..., ஒரு வேளை அவர்தான் மாற்றிவிட்டாரோ என்று நினைத்தபடியே அந்தப் பக்கத்தை மூடி விட்டு திரும்பவும் அதே முறையில் அவரின் வலைப்பூவுக்குச் சென்றேன் ... திரும்பவும் அதே பைபிள் பக்கம் .. உடனே நான் முடிவு கட்டி விட்டேன் .. நண்பர் காசியின் வலைப்பூவை யாரோ ஹேக் (?) செய்துவிட்டார்கள்.. அதுவும் ஒரே நாள் இரவில் .. :))


என்ன செய்யலாம் என்று யோசித்தேன் .. முதலில் மானிட்டரில் தெரிந்த அந்தப் பக்கத்தை அப்படியே சேமித்தேன்.. உடனடியாக நண்பர் காசிக்கும் , தமிழ்வலைப்பூ யாகூ குழுமத்துக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தேன் ... அதற்கு முன்னர் இன்னொரு தடவை சோதித்துப் பார்த்துக்கொள்வோம் என்று எண்ணி திரும்பவும் அதே முறையில் செல்லாமல் , நானே அவரின் வலைப்பூ முகவரியை http://kasiblogs.blogspot.com என்று தட்டச்சு செய்தேன்.. இந்தத் தடவை சரியாக அவருடைய வலைப்பூ வந்துவிட்டது .. என்னடா இது ஒரே மாயமாக இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டே அவர் என் வலைப்பூவில் பதித்த முகவரியைக் கவனமாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது .. http://kasiblogs.blogpsot.com என்று இருந்தது .. இந்த முகவரிக்கு நீங்களும் போய்த்தான் பாருங்களேன்.. குழப்பம் வேற ஒண்ணுமில்லைங்க .. முகவரியில் "P" யும் "S" - உம் இடமாறி இருந்திருக்கிறது .. ஆனால் எனக்கு என்ன ஆச்சரியமென்றால் இதே முகவரியில் எப்படி ஒரு தளம் இருந்தது என்பதுதான்... ஒரு வேளை இந்தப் பைபிள் தளமும் இவருடையதுதானோ .. ? .. இதற்குப் பதிலை நண்பர் காசிதான் சொல்லவேண்டும் ... :))

Tuesday, January 06, 2004

நல்லாயிருக்குதா..... ?போன வாரத்துக்கு முன்னாடி கிருஸ்துமஸ்காக அலங்கார மின்விளக்கு வைத்திருந்தார்கள் ...பாக்குறதுக்கு நல்லாயிருந்தது .....
வர வர எதைத்தான் வலைப்பூவுல போடுறதுன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சுன்னு நீங்க முணுமுணுக்கறது எனக்கு காதுல விழுதுங்கோ .. :))