Tuesday, May 10, 2005

பொட்டலக் காகிதங்கள்

தேவையென்றால் யாகம் வளர்ப்பார்கள்
இல்லையென்றால்
வெறுப்புடன் குடைபிடிப்பர்
முணுமுணுத்தது
தூறலாய்.

********

நினைத்தேன்
வாழ்க்கையைக் காதலியாய்.
அதனால்தானோ
விரட்டி விரட்டி அடிக்கிறது?
கோபமாய்
சில சமயம் செல்லமாய்.

********

யாரையும் தொடவிட்டதில்லை
எனதை அனுமதியின்றி.
ஆனால் எப்படிக் காணாமல் போனது
மனம் மட்டும் ?

********

எனவே காதலி
கடைசியில்
கவிதையாவது கிடைக்கும்.

********

asl? brb rut
மனங்கள் மட்டுமல்ல
சொற்களும் சுருங்கிவிட்டன
இண்டர்நெட்டால்.

********

பொரிகடலை கட்டும்
துண்டுத் தாளானது
கடைசியில்.
ஒரு காலத்தில்
புத்தகமாய்ப் போட இருந்தேன்.

9 Comments:

At 5/11/2005 12:41:00 AM, Anonymous Anonymous said...

.

 
At 5/11/2005 04:16:00 AM, Blogger jeevagv said...

பொட்டலக் காகிதங்கள்
மட்டில்லா வியப்பைத் தருகின்றன!
வாழ்த்துக்கள்.

 
At 5/11/2005 04:50:00 AM, Blogger குழலி / Kuzhali said...

//பொரிகடலை கட்டும்
துண்டுத் தாளானது
கடைசியில்.
ஒரு காலத்தில்
புத்தகமாய்ப் போட இருந்தேன்.//

மிக அருமையான எதார்த்தமாக இருந்தது, பலரின் அனுபவமும் கூட இது இப்பொழுது பொரிகடலை கட்ட வேண்டாம், வலைப்பதிவாக போடுங்களேன்.

 
At 5/11/2005 08:59:00 AM, Blogger Chandravathanaa said...

முத்து நல்லாயிருக்கின்றன.

 
At 5/12/2005 03:10:00 AM, Blogger Muthu said...

ஜீவா, குழலி, சந்திரவதனா,
நன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு.

 
At 5/22/2005 09:01:00 PM, Anonymous Anonymous said...

Lovely.

 
At 5/23/2005 07:25:00 AM, Blogger Muthu said...

You Know,
thanks :-).

 
At 6/04/2005 01:44:00 AM, Blogger வெங்கி / Venki said...

எப்படி (கவனிக்காமல்) விட்டேன். எவ்வளவு அருமையான கவிதைகள்.
//யாரையும் தொடவிட்டதில்லை
எனதை அனுமதியின்றி.
ஆனால் எப்படிக் காணாமல் போனது
மனம் மட்டும் ?//

என்ன அருமையான ஆனால் உணமையான வரிகள்.

 
At 6/05/2005 03:12:00 AM, Blogger Muthu said...

நன்றி வெங்கி :-).

 

Post a Comment

<< Home