என் பையனின் அப்பா கோடீஸ்வரர் ... !
ஒரு பெரிய கோடீஸ்வரரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. அவர் பெயர் சரியாய் நினைவில் இல்லை ( ராக்பெல்லர்?). அவரிடம் ஒருவர் கேட்டாராம்.
"... உங்கள் மகன் எங்கு போனாலும் மிக உயர்ந்த ஓட்டலில்தான் தங்குகிறார் , தாராளமாய்ப் பணத்தைச் செலவழிக்கிறார். ஆனால் நீங்கள் போகுமிடத்தில் சிக்கனமான ஓட்டலைப் பார்த்துத் தேடிப்பிடித்துத் தங்குகிறீர்கள், இவ்வளவு பணமிருந்தும் மிகச் சிக்கனமாய் இருக்கிறீர்களே இது ஏன் ? .... "
இதற்கு அவர் சொன்ன பதில்..
" .... என் பையனின் அப்பா ஒரு பெரிய கோடீஸ்வரர்.. , ஆனால் எனது அப்பா அப்படியில்லையே... "
0 Comments:
Post a Comment
<< Home