காணாமல் போனவைகள்

பயமூட்டும் ஜந்துக்கள்
மிளகாய், இஞ்சி, மிளகு
ஒரு காலத்தில்.
அப்போதெல்லாம்
தண்ணீர்
பல சொம்புகள்
தேவைப்படும்,
சிறு வெங்காயத்துக்கே.
இளம் நாவின்
சுவை மொட்டுக்கள்
புத்தம் புதியனவாய் இருந்தபோது
எனைக் கண்கலக்கி
உடல் பதற வைத்திருக்கிறது
எண்ணெயில் பொறித்தெடுத்த
பிஞ்சு மிளகாயின் சிறுநுனிகூட .
வியந்திருக்கிறேன்
பச்சை மிளகாயை
இயல்பாய்க் கடித்துத் தின்போரை,
அவர்கள் எதையோ
அடிவேர்வரை இழந்து விட்டிருக்கிறார்கள்
என்பதை அறியாமலே.கால ஓட்டத்தில்
எரிச்சல் தரும் பச்சை மிளகாய்
வெள்ளரிப் பிஞ்சாகியிருப்பது
எனக்கு
வசதியாய்த்தான் இருக்கிறது.
என்றாலும்
எனக்குப் புரியவே இல்லை.
சீரகத்தின் காரத்துக்குக்
குடம்குடமாய்க்
கண்ணீர் விடுவோரைப் பார்த்தால்
புன்னகை வராமல்
ஏன் எனக்கு
அவர்கள்மேல்
இப்போதெல்லாம்
பொறாமை ?.
3 Comments:
வாங்க முத்து சார்
நீங்க தான் இந்த (பொறாமை) லிஸ்ட்டில் லேட்டஸ்ட் என்ட்ரி
///நீங்க தான் இந்த (பொறாமை) லிஸ்ட்டில் லேட்டஸ்ட் என்ட்ரி///
கணேஷ்,
அந்த லிஸ்டில் உங்க பேரும் இருக்கா ? :-) :-)
Intha kavithai sollaamal sollum sila vishayangalai, migavum rasithen.
vaazhthukkal. thodarga.
-Sadish
Post a Comment
<< Home