நண்பர் காசியின் வலைப்பூவும் , பைபிள் தளமும் ...
நண்பர் காசி இன்று என்னுடைய வலைப்பூவில் இன்று எழுதியிருந்த கமெண்டின் வழியாக அவர் வலைப்பூவுக்கு செல்ல முயன்றேன் .... என்ன ஆச்சரியம் அது வேறு ஏதோ பக்கத்துக்கு அது இட்டுச்சென்று விட்டது ... அந்தப் பக்கம் பைபிள் சொல்லித் தருவதைப் பற்றி இருந்தது .. எனக்கோ ஆச்சரியம் .. நேற்று வரை வேறு மாதிரி இருந்த வலைப்பூ ஒரே நாளில் எப்படி இப்படி ஆகிவிட்டதே ..., ஒரு வேளை அவர்தான் மாற்றிவிட்டாரோ என்று நினைத்தபடியே அந்தப் பக்கத்தை மூடி விட்டு திரும்பவும் அதே முறையில் அவரின் வலைப்பூவுக்குச் சென்றேன் ... திரும்பவும் அதே பைபிள் பக்கம் .. உடனே நான் முடிவு கட்டி விட்டேன் .. நண்பர் காசியின் வலைப்பூவை யாரோ ஹேக் (?) செய்துவிட்டார்கள்.. அதுவும் ஒரே நாள் இரவில் .. :))
என்ன செய்யலாம் என்று யோசித்தேன் .. முதலில் மானிட்டரில் தெரிந்த அந்தப் பக்கத்தை அப்படியே சேமித்தேன்.. உடனடியாக நண்பர் காசிக்கும் , தமிழ்வலைப்பூ யாகூ குழுமத்துக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தேன் ... அதற்கு முன்னர் இன்னொரு தடவை சோதித்துப் பார்த்துக்கொள்வோம் என்று எண்ணி திரும்பவும் அதே முறையில் செல்லாமல் , நானே அவரின் வலைப்பூ முகவரியை http://kasiblogs.blogspot.com என்று தட்டச்சு செய்தேன்.. இந்தத் தடவை சரியாக அவருடைய வலைப்பூ வந்துவிட்டது .. என்னடா இது ஒரே மாயமாக இருக்கிறதே என்று எண்ணிக்கொண்டே அவர் என் வலைப்பூவில் பதித்த முகவரியைக் கவனமாகப் பார்த்தபோதுதான் தெரிந்தது .. http://kasiblogs.blogpsot.com என்று இருந்தது .. இந்த முகவரிக்கு நீங்களும் போய்த்தான் பாருங்களேன்.. குழப்பம் வேற ஒண்ணுமில்லைங்க .. முகவரியில் "P" யும் "S" - உம் இடமாறி இருந்திருக்கிறது .. ஆனால் எனக்கு என்ன ஆச்சரியமென்றால் இதே முகவரியில் எப்படி ஒரு தளம் இருந்தது என்பதுதான்... ஒரு வேளை இந்தப் பைபிள் தளமும் இவருடையதுதானோ .. ? .. இதற்குப் பதிலை நண்பர் காசிதான் சொல்லவேண்டும் ... :))
0 Comments:
Post a Comment
<< Home